search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தல்: சுஷ்மா, சுமித்ரா மகாஜன் பெயர்கள் பரிசீலனை?
    X

    ஜனாதிபதி தேர்தல்: சுஷ்மா, சுமித்ரா மகாஜன் பெயர்கள் பரிசீலனை?

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைவதால் புதிய ஜனாதிபதி தேர்வுக்கு சுஷ்மா, சுமித்ரா மகாஜன், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பெயர்களை பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அரசியல்வாதிகளிடமும் நாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

    ஜனாதிபதியை பாராளுமன்ற இரு அவை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள். எம்.பி.க்கள் மொத்தம் 776 பேர் உள்ளனர். நாடெங்கும் 4120 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் ஓட்டுக்கும் ஒரு மதிப்பு உண்டு.

    அதன்படி ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும். எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படும்.

    ஒட்டு மொத்தமாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில் பாதிக்கு மேல் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும்.

    ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு வாரங்களில் சூடு பிடிக்கத் தொடங்கி விடும். வரும் 11-ந்தேதி உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வர உள்ளன. அதன் பிறகு மார்ச் 3-வது வாரம் ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    5 மாநில தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றால்தான் பாரதிய ஜனதா நிறுத்தும் வேட்பாளர் எளிதில் வெற்றி பெற முடியும். இல்லையெனில் மாநில கட்சிகளின் உதவியை பா.ஜ.க. நாட வேண்டியிருக்கும்.

    ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் மூத்த தலைவர் அத்வானி நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. தற்போது அத்வானியை பா.ஜ.க. தலைவர்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.



    அவருக்குப் பதில் சுஷ்மா சுவராஜ், சுமித்ரா மகாஜன், முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவரில் ஒருவரை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது. சுஷ்மா சுவராஜ் நிறுத்தப்பட்டால் அவருக்கு அத்வானியின் ஆதரவு கிடைக்கும் என்று தெரிகிறது.
    Next Story
    ×