search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலுக்கு ரூ. 5 கோடி காணிக்கை: சந்திரசேகர் ராவுக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு
    X

    திருப்பதி கோவிலுக்கு ரூ. 5 கோடி காணிக்கை: சந்திரசேகர் ராவுக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு

    திருப்பதி கோவிலுக்கு ரூ. 5 கோடி காணிக்கை செலுத்திய முதல்வர் சந்திரசேகர ராவ் மீது வழக்கு தொடர இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி கூறியுள்ளார்.

    நகரி:

    தெலுங்கானா தனி மாநிலம் உருவானால் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 5 கோடி நகை காணிக்கை தருவதாக தெலுங்கானா ராஷ் டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் வேண்டிக் கொண்டார்.

    தெலுங்கானா மாநி லம் உருவாகி முதல்- மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி ஏற்றதும் அரசு சார்பில் திருப்பதி ஏழுமலையான் நகை காணிக்கைக்கு ரூ. 5 கோடியை ஒதுக்கீடு செய்தார். அந்த நகைகளை சமீபத்தில் திருப்பதியில் காணிக்கையாக செலுத்தினார்.


    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி கூறியதாவது:-

    முதல்வர் சந்திரசேகர ராவ் தனது சொந்த வேண்டுதல்களை மக்கள் வரிப் பணத்தில் நிறைவேற்றி வருகிறார்.

    பொது பணத்தில் இருந்து பழுதடைந்த கோவில்களை புதுப்பிக்கவும், வருமானம் இல்லாத கோவிலுக்கும் நிதி கொடுக்க வேண்டும்.


    ஆனால் பணக்கார கோவிலான திருப்பதிக்கு ரூ. 5 கோடி நகை காணிக்கை கொடுத்து உள்ளார். இது சட்டவிரோதம். மக்கள் பணத்தை சந்திரசேகர ராவ் சொந்த வேண்டுதலுக்காக செலவு செய்ததை எதிர்த்து ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார்.

    இதேபோல கம்யூனிஸ்டு தலைவர் சாந்தவெங்கட் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×