search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையை இழந்தாலும் மற்ற மாநகராட்சிகளில் முத்திரை பதித்த பா.ஜ.க
    X

    மும்பையை இழந்தாலும் மற்ற மாநகராட்சிகளில் முத்திரை பதித்த பா.ஜ.க

    மகராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் முக்கியமான மாநகராட்சியான மும்பையை பா.ஜ.க. இழந்தபோதிலும், மற்ற மாநகராட்சிகளில் பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதுவரை கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவ சேனாவும் பா.ஜ.க.வும் இந்த முறை தனித்தனியே களமிறங்கின. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை பிடிப்பதில் இரு கட்சிகளுக்குமிடையே நேரடி போட்டி நிலவியது. குறிப்பாக மிகப்பெரிய மாநகராட்சியான மும்பை மாநகராட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி இருந்தது.

    மும்பை மாநகராட்சியில் பெரும்பான்மைக்கு 114 வார்டுகளில் வெற்ற பெற வேண்டும் என்ற நிலையில், சிவ சேனா 84 வார்டுகளையும், பா.ஜ.க. 81 வார்டுகளையும் கைப்பற்றியியது. காங்கிரஸ் 31 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் 9 வார்டுகளிலும், நவநிர்மாண் சேனா 7 வார்டுகளிலும், சுயேட்சைகள் 14 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே, எந்த கட்சி மாநகராட்சியை நிர்வகிக்கும்? என்பது இழுபறியாக உள்ளது. சிவசேனா விரும்பினால் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என தெரிகிறது.

    மும்பை மாநகராட்சியை இழந்தாலும் மற்ற மாநகராட்சிகளில் பா.ஜ.க. முன்னேறி வருகிறது. உலாஸ்நகர், புனே, பிம்ப்ரி, சேலாப்பூர், நாஷிக், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய மாநகராட்சிகளில் பா.ஜ.க. அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது. தானே மாநகராட்சியில் மட்டும் சிவசேனா பா.ஜ.க.வை விட அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
    Next Story
    ×