search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளர்ச்சிப் பணிகள் இல்லை: வாக்குப்பதிவை புறக்கணித்த உ.பி. கிராமம்
    X

    வளர்ச்சிப் பணிகள் இல்லை: வாக்குப்பதிவை புறக்கணித்த உ.பி. கிராமம்

    உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெற்று வரும் 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவினை பதேபூர் தொகுதியில் உள்ள ஒரு கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று நான்காம்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 12 மாவட்டங்களில் அடங்கிய 53 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    இதில், பதேபூர் தொகுதியில் உள்ள காகா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர். வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி வாக்களிப்பதை தவிர்த்தனர். அங்குள்ள வாக்குச்சாவடி 105 மற்றும் 106-ல் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. 107-ல் 9 ஓட்டுக்களும் 109-ல் 8 ஓட்டுக்களும் மட்டுமே பதிவாகியிருந்தன.

    இதற்கிடையே மஹோபா என்ற பகுதியில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. அத்தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பாக, சித்கோபால் சாஹூ என்பவர் போட்டியிடுகிறார். இன்று மஹோபா வாக்குச் சாவடியில், அவரது ஆதரவாளர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
    Next Story
    ×