search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-ம் கட்ட தேர்தல்: உ.பி.யில் வாக்களித்த மேற்கு வங்காள ஆளுநர்
    X

    4-ம் கட்ட தேர்தல்: உ.பி.யில் வாக்களித்த மேற்கு வங்காள ஆளுநர்

    உத்தர பிரதேசத்தில் 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்காள மாநில ஆளுநர் தனது சொந்த ஊரான அலகாபாத்தில் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
    லக்னோ:

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட வாக்குப்பதிவுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் 4-ஆவது கட்டமாக 12 மாவட்டங்களில் அடங்கிய 53 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பேரவைத் தொகுதிகளும் இதில் அடங்கும். ஆனால், இந்த தேர்தலையொட்டி, அவர் தனது தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

    ரேபரேலி தவிர பிரதாப்கர், கௌசாம்பி, அலாகாபாத், ஜான்சி, லலித்பூர், மஹோபா, ஹமீர்பூர், ஃபதேபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கிய தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.



    மேற்கு வங்காள ஆளுநர் கேஷரி நாத் திரிபாதி அலகாபாத்தில் உள்ள 252-வது வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அலகாபாத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் உத்தர பிரதேச பாரதிய ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மயுர்யா தனது வாக்கினை பதிவு செய்தார். ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அதிதி சிங் காலையியே வந்து வாக்கினை பதிவு செய்தார்.

    காலை 9 மணி நிலவரப்படி 10.23 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக பண்டாவில் 12.2 சதவீத வாக்குப்பதிவு இருந்தது. ரேபரேலியில் 9.5 சதவீதமும், பதேபூரில் 9.8 சதவீதமும், ஜலானில் 8.66 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
    Next Story
    ×