search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜியோ சலுகை மார்ச் 31-ல் முடிந்த பிறகு கால், ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படாது: அம்பானி
    X

    ஜியோ சலுகை மார்ச் 31-ல் முடிந்த பிறகு கால், ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படாது: அம்பானி

    ஜியோ சலுகை மார்ச் 31-ம் தேதி முடிந்த பிறகு கால், ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படாது என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
    மும்பை:

    ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜியோ சிம்மை ஏராளமான சலுகைகளுடன் அறிமுகம் செய்தார். இந்த சலுகைகள் அனைத்தும் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில், ஜியோ சலுகை மார்ச் 31-ம் தேதி முடிந்த பிறகு கால், ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படாது என ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டியில் ''ரிலையன்ஸ் ஜியோ தொடங்கிய 17௦ நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்தனர். ஜியோ ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு வினாடிக்கும் 7 வாடிக்கையாளர்கள் இணைகின்றனர். எங்களது நெட்வொர்க்கை வேகமாகவும், பலமாகவும் மாற்ற ஒவ்வொரு நாளையும் நாங்கள் செலவழித்து வருகிறோம். இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் டேட்டா என்பது ஆக்சிஜன் போன்றது.



    தற்போது ஜியோ இணைப்பைப் பெற்றுள்ளவர்கள் அடிப்படை சந்தாதாரர்கள் ஆக முதன்முறைக் கட்டணமாக 99 ரூபாய் செலுத்த வேண்டும். நிரந்தர சந்தாதாரர் ஆன பின்னர் மாதந்தோறும் 3௦3 ரூபாய் கட்டணமாக செலுத்தி வாய்ஸ் கால்கள் மற்றும் இணைய சேவையை அளவின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.
    Next Story
    ×