search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டாம்: அமிதாப் பச்சனுக்கு அகிலேஷ் அறிவுரை
    X

    குஜராத் கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டாம்: அமிதாப் பச்சனுக்கு அகிலேஷ் அறிவுரை

    பிரதமர் மோடி பெயரை குறிப்பிடாமல் குஜராத் கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டாம் என்று நடிகர் அமிதாப் பச்சனுக்கு முதல்-மந்திரி அகிலேஷ் மறைமுகமாக அறிவுரை வழங்கி உள்ளார்.
    ரேபரேலி:

    403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. 4-வது கட்ட தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. 53 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

    ஆளும் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    குஜராத் சுற்றுலாத் துறைக்கான விளம்பர தூதுவராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில் வெளியாகி உள்ள விளம்பரத்தில் குஜராத் வன விலங்குகள் சரணாலயத்துக்கு வருகை தருமாறு அமிதாப் அழைப்பு விடுக்கிறார். அந்த விளம்பரத்தில் கழுதைகளும், காண்பிக்கப்படுகின்றன.



    அமிதாப்பிடம் ஒன்று கூற விரும்புகிறேன். நீங்கள் இந்த நூற்றாண்டின் புகழ்பெற்ற நடிகர். உங்கள் தகுதிக்கு குஜராத்தில் இருக்கும் கழுதைகளுக்காக விளம்பரம் செய்ய வேண்டுமா? கழுதைகளுக்கு எல்லாம் விளம்பரங்கள் என்ற நிலை ஏற்பட்டால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். அந்த கழுதைகளுக்காக நீங்கள் இனி விளம்பரம் செய்ய வேண்டாம்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அகிலேஷ் யாதவ் இதுபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
    Next Story
    ×