search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி தலித்துகளுக்கு எதிரான மனிதர்: மாயாவதி கடும் தாக்கு
    X

    மோடி தலித்துகளுக்கு எதிரான மனிதர்: மாயாவதி கடும் தாக்கு

    பிரதமர் நரேந்திர மோடி தலித்துகளுக்கு எதிரான மனிதர் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவி மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
    லக்னோ:

    403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் வருகின்ற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

    இதனையொட்டி உத்தரபிரதேச மாநிலம் ஓராய் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பாஜக கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியை, மோடி கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார்.

    இதற்குப் பதிலடியாக பிரதமர் மோடி தலித்துகளுக்கு எதிரான மனிதர் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவி மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது மாயாவதி பேசியதாவது:-

    பிரதமர் மோடி தலித்துகளுக்கு எதிரான மனிதர். பகுஜன் சமாஜ் கட்சி முதலில் ஒரு இயக்கம், பின்னர் தான் அது கட்சி. திருமணமே செய்து கொள்ளாமல் சிறுபான்மையினர் நலனுக்காக குறிப்பாக முஸ்லீம்கள் நலனுக்காக நான் உழைத்து வருகிறேன்.

    சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய மக்கள் தங்களது மிகப்பெரிய சொத்தாக என்னைக் கருதுகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியை பேகன்ஜி சமாஜ் கட்சி என்று கூறிய பிரதமர் மோடியை உத்தர பிரதேச மக்கள் இந்தத் தேர்தலில் பழிக்குப்பழி வாங்குவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×