search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருங்கால வைப்புநிதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி: மே மாதம் அறிமுகம்
    X

    வருங்கால வைப்புநிதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி: மே மாதம் அறிமுகம்

    வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட செயல்முறைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை மேற்கொள்ள இ.பி.எப்.ஓ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    புதுடெல்லி:

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நேரடியாக விண்ணப்பம் வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இவ்வாறு சுமார் 1 கோடி விண்ணப்பங்கள் வரை தற்போது வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு (இ.பி.எப்.ஓ.) வந்துள்ளன. இதனால் இந்த நடவடிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    இந்த காலவிரயத்தை தடுக்க வருங்கால வைப்புநிதியை திரும்ப பெறுதல், ஓய்வூதியம் இணைத்தல் உள்ளிட்ட செயல்முறைகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை மேற்கொள்ள இ.பி.எப்.ஓ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இ.பி.எப்.ஓ.வின் அனைத்து துறை அலுவலகங்களையும் இணையதளம் மூலம் இணைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

    இந்த பணிகள் அனைத்தும் 2 மாதங்களில் முடிக்கப்பட்டு மே மாதம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்படும் என இ.பி.எப்.ஓ. அதிகாரி வி.பி.ஜாய் தெரிவித்தார். வருங்கால வைப்புநிதியை கேட்டு ஆன்லைன் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு 3 மணி நேரத்தில் தீர்வு காண இ.பி.எப்.ஓ. திட்டமிட்டு உள்ளது. 
    Next Story
    ×