search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் கோரிக்கை
    X

    மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ் கோரிக்கை

    இறைச்சிகளுக்காக விலங்குகளை கொல்லும் இடங்களை மூட நடவடிக்கை எடுப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில் நாடு முழுக்க மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    லக்னோ:

    உத்திர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலம் முழுக்க இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடங்கள் அனைத்தையும் முழுமையாக மூடுவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க தலைவர் அமித் ஷா வாக்குறுதி அளித்துள்ளார். 

    அமித் ஷா வாக்குறுதிக்கு பதில் அளித்துள்ள உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், இரண்டாவது முறையாக மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய மோடி அரசு மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    முதலில் அமித் ஷா லெதர் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, மாற்று மூலப்பொருட்கள் மூலம் செய்யப்படுவனவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் ஏழு கட்டங்களில் வாக்குபதிவு நடைபெற இருக்கும் உத்திர பிரதேசத்தில் ஒட்டு மொத்த வாக்கு எண்ணிக்கை மார்ச் 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×