search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான நிலஅதிர்வு
    X

    ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான நிலஅதிர்வு

    ஸ்ரீநகர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.
    புதுடெல்லி:

    ஸ்ரீநகர், உத்தரகாண்டின் கார்வால் உள்ளிட்ட வடமாநிலங்களின் ஒரு சில இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர்  அளவுகோலில் 5.5-ஆக பதிவாகிய இந்த நிலஅதிர்வால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வந்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்ட இந்த நிலஅதிர்வானது, நேற்று இரவு சுமார் 10:52 மணிக்கு  ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலஅதிர்வை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    முன்னதாக கடந்த திங்களன்று வடஇந்தியாவில் உத்தரகாண்ட் உட்பட பல இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர்  அளவுகோலில் 5.8-ஆக பதிவான இந்த நிலஅதிர்வு டெல்லியிலும் உணரப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக்  மாவட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில்  உருவாகியதாக தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு செயலகம் தெரிவித்தது.

    பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட வடஇந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வானது உணரப்பட்டது  குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×