search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்
    X

    பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்

    பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது டெல்லி மேல்-சபையில் பிரதமர் மோடி நேற்று பேசினார். அதில்
    பண மதிப்பை நீக்கியது உலக அளவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்று. ஊழலால் நாட்டின் ஏழை மற்றும்  நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால்தான் கருப்பு பணத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஏழை, நடுத்தர மக்கள் ஒரு பக்கமும், அதை எதிர்ப்பவர்கள் இன்னொரு பக்கமும் நின்றனர்.  இந்த விஷயத்தில்தான் முதல் முறையாக அரசும், மக்களும் ஒரே மனோ நிலையில் இருந்தனர்.

    ஏறக்குறைய 35 ஆண்டுகள் மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தினார். பல்வேறு  ஊழல்களுக்கு இடையே அவர் மட்டும் மெல்லிய அளவில் நேர்மையானவராக இருந்தார். தன்னை காத்துக்கொள்ளும் கலையில்  அவர் கைதேர்ந்தவராகவும் திகழ்ந்தார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கிண்டல் செய்ததும் காங்கிரஸ்  எம்.பி.க்கள் அனைவரும் மோடியை கண்டித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதற்கு பாஜக சார்பில் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் தனது டுவிட்டர்  பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது, பிரதமர் உரையின் போது காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து இடையூறு  செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த செயலுக்கு பிரதமரிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவும் அவர்  வலியுறுத்தினார்.
    Next Story
    ×