search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு விவகாரம் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி உள்ளது: குடியரசு தலைவர் உரை
    X

    ரூபாய் நோட்டு விவகாரம் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி உள்ளது: குடியரசு தலைவர் உரை

    ரூபாய் நோட்டு விவகாரம் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி உள்ளதாகவும், பணத்தட்டுப்பாடு விரைவில் சீராகும் என்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
    புதுடெல்லி:

    நாட்டின் 68-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரையாற்றினார். அப்போது, நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு புகழாரம் சூட்டிய அவர், தொடர்ந்து பேசியதாவது:-

    சர்வதேச அளவில் சவாலான சூழ்நிலை நிலவியபோதும் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக விளங்கியது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. உலக அளவில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருப்பது இந்திய பொருளாதாரம் தான். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தற்காலிகமாக பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டிருக்கலாம். நம்முடைய பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.

    ஜனநாயகம் நம் ஒவ்வொருவருக்கும் உரிமைகளை வழங்கி உள்ளது. ஜனநாயகத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் யாவும் பொறுப்புடன் கூடியவை ஆகும்.

    நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. சமூக நலனை கருத்தில் கொண்டு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும்.

    சமூக கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை இந்தியாவின் வலிமை. 2016 பொதுத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானதன்மூலம் ஜனநாயகத்தின் வலிமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உலகின் 10-வது தொழில்துறை சக்தியாக இந்தியா திகழ்கிறது. உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.

    ரூபாய் நோட்டு விவகாரம் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி உள்ளது. ரொக்கமில்லா பண பரிவர்த்தனை தற்போதைய பண தட்டுப்பாட்டை விரைவில் சீராக்கும்.

    வறுமையை ஒழிப்பதற்கும், உற்பத்தி மற்றும் தயாரிப்பு துறைகளை மேம்படுத்துவதிலும் இன்னும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் கூடுதலாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×