search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி தேர்தல்; பா.ஜ.க. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ராஜ்நாத் சிங் மகன் நொய்டா தொகுதியில் போட்டி
    X

    உ.பி தேர்தல்; பா.ஜ.க. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ராஜ்நாத் சிங் மகன் நொய்டா தொகுதியில் போட்டி

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் 155 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது.
    லக்னோ;

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

    மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க, உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப்பிடிக்க கடும் முயற்சி எடுத்துவருகிறது.

    மொத்தமுள்ள 403 தொகுதிகளில், முதல் கட்டமாக 149 தொகுதிகளுக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக 155 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் மகன் நொய்டா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×