search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - இரு தொகுதிகளில் முதல் மந்திரி போட்டி
    X

    உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - இரு தொகுதிகளில் முதல் மந்திரி போட்டி

    உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலையொட்டி 63 பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. முதல் மந்திரி ஹரிஷ் ராவத் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
    புதுடெல்லி: 

    உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கான 70 தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அம்மாநில முதல் மந்திரி ஹரீஷ் ராவத், கிச்சா மற்றும் ஹர்த்வார் புறநகர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

    மீதமுள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
    Next Story
    ×