search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி தேர்தல்: சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்
    X

    உ.பி தேர்தல்: சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்

    உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சி இம்முறை காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. சமாஜ்வாடி கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையை, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரியும், அக்கட்சியின் தேசிய தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டார். 

    மாநில வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தப்படும், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், காவல் துறையை நவீனப்படுத்தப்படும் திட்டம், பறக்கும் சாலைகள் அமைத்தல், 

    ஜனேஷ்வர் மிஷ்ரா மாதிரி கிராம முன்னேற்ற திட்டம், விவசாயிகளுக்கு உரம், விதை ஆகியவை எளிய முறையில் பெறுவதற்கான திட்டம் ஆகியவை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அகிலேஷ் யாதவ், ” 2012-ம் ஆண்டில் ஆட்சிக்கு வரும் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம், தொண்டர்கள் கடந்த ஐந்து ஆண்டுகால அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களான முலாயம் சிங் யாதவ், ஷிவ் பால் யாதவ் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×