search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பீட்டா’வை தடை செய்ய ஆலோசனை: மத்திய சுற்றுச்சூழல் மந்திரி தகவல்
    X

    ‘பீட்டா’வை தடை செய்ய ஆலோசனை: மத்திய சுற்றுச்சூழல் மந்திரி தகவல்

    பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார்.
    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால் ஜல்லிக்கட்டு தடை இல்லாத நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரி மெரினா உள்பட பல்வேறு இடங்களில் போராட்டத்தை கைவிட மறுத்து மாபெரும் எழுச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    பீட்டா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதாரங்கள் வருகின்றன. அவர்கள் எப்போதுமே இந்த பிரச்சினைகளை (ஜல்லிக்கட்டு) எடுத்து வைப்பவர்கள் எங்களால் என்ன செய்ய முடியுமோ அது பற்றி ஆலோசித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×