search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் அன்புமணி ராமதாஸ் மனு
    X

    ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் அன்புமணி ராமதாஸ் மனு

    ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் அன்புமணி ராமதாஸ் மனு அளித்தார். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    புதுடெல்லி :

    பா.ம.க. இளைஞர் அணித்தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் குறித்தும் விரிவாக கூறினார்.

    பின்னர், ஜல்லிக்கட்டு பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றையும் ஜனாதிபதியிடம் அன்புமணி ராமதாஸ் வழங்கினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜல்லிக்கட்டு போட்டி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வீர விளையாட்டாக தமிழர்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை நிரூபிக்க நூற்றுக்கணக்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. மதுரை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியத்தில் தனி மனிதன் ஒருவன் காளையை அடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் ஒருபோதும் துன்புறுத்தப்படாது. 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு, 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், சட்டத்திருத்தத்தின் மூலம் அதை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசோ, மாநில அரசோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழர்களின் உணர்வுகளை பாதிக்கும் இந்த பிரச்சினைக்கு சுமுகமான வழியில் நிரந்தர தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக மக்களின் எழுச்சிக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையிலும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×