search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் - சிறுவர், சிறுமிகளும் கலந்து கொண்டனர்
    X

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் - சிறுவர், சிறுமிகளும் கலந்து கொண்டனர்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றும் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறுவர்-சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்
    பெங்களூரு:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றும் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறுவர்-சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை நகரில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் இரவு, பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி வழங்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 19-ந் தேதி பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று திரண்டு டவுன்ஹால் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்த நிலையில், நேற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள காந்தி சிலை முன்பாக, இங்கு வசிக்கும் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். மேலும் பெண்கள், சிறுவர், சிறுமிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர், சிறுமிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதி இருந்த பதாகைகளை கையில் வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த அனுமதி வழங்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

    Next Story
    ×