search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காளைகளை ஏவி விட வேண்டும்: ராம்கோபால் வர்மா சர்ச்சை டுவிட்
    X

    ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காளைகளை ஏவி விட வேண்டும்: ராம்கோபால் வர்மா சர்ச்சை டுவிட்

    ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காளைகளை ஏவி விட வேண்டும் என இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்து, பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்திறகு ஆளாகியிருக்கிறார்.
    ஐதராபாத்:

    சமூக வலைதளங்களில் கருத்துக் கூறி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்துக் கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது உலக நாடுகள் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இளைஞர்களின் இந்த போராட்டத்துக்கு உலகம் முழுவதுமிருந்து ஆதரவு குவிந்து வருகிறது.

    இந்நிலையில் தெலுங்கு சினிமா இயக்குனர் ராம் கோபால் வர்மா ஜல்லிக்கட்டுக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:-

    கலாச்சாரம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடத்தி அப்பாவி மாடுகளைத் துன்புறுத்துவது சரி என்றால், அல்கொய்தா இயக்கம் அப்பாவி மக்களைக் கொல்வதும் சரிதான். போராட்டக்காரர்களுக்கு ஜல்லிக்கட்டுக்கான அர்த்தம் தெரியாது. அவர்கள் அனைவரும் மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கும் ரத்தம் குடிக்கும் கழுகுகள்.

    நட்சத்திரங்கள் ஜல்லிக்கட்டை ஆதரிப்பது ஓட்டுக்காகவும், டிக்கெட்டுக்காகவும் தான். விலங்குகளுக்கு மட்டும் ஓட்டுப்போடவும், டிக்கெட் வாங்கவும் தெரிந்தால் எந்த பிரபலமும் ஜல்லிக்கட்டை ஆதரிக்க மாட்டார்கள். போராட்டக்காரர்கள் மீது 1௦௦௦ காளைகளை ஏவி விட்டால் அவர்கள் எவ்வாறு போராடுவார்கள்?

    இவ்வாறு ராம் கோபால் வர்மா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

    இது போராட்டக்காரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு எதிராக பலர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.
    Next Story
    ×