search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    210 வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்
    X

    210 வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்

    85 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று சமாஜ்வாடி பிடிவாதத்தால் காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் 210 வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.

    புதுடெல்லி:

    உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநில சட்ட சபை தேர்தலில் வருகிற பிப்ரவரி மாதம் 11-ந் தேதி தொடங்கி, 15,19,23,27 மார்ச் 4,8 ஆகிய தேதிகளில் 7 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    அங்கு ஆளும் சமாஜ்வாடி, பா.ஜனதா, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே பிளவு பட்ட சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அணியை தேர்தல் கமி‌ஷன் அங்கீகரித்துள்ளது.

    அகிலேஷ் யாதவுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இரு கட்சி இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன.

    உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் 100 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதற்கு சமாஜ்வாடி தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

    பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை வெளியிட்டு வருகிறது. நேற்று 210 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.

    ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் அவசரமாக லக்னோ திரும்பி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி மேலிடத்துக்கும் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்து தகவல் தெரிவித்தார்.

    சமாஜ்வாடி தரப்பில் காங்கிரசுக்கு 84 அல்லது 85 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது. இது பற்றி சமாஜ்வாடி துணைத்தலைவர் கிரண் மோய் நந்தா கூறுகையில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் 54 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே அந்த கட்சியின் செல்வாக்கு அடிப்படையில் 84 அல்லது 85 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும்” என்றார்.

    மாநில மந்திரி ரகுராஜ் பிரதாப்சிங் கூறுகையில் எங்கள் கட்சி பிறகட்சிகளுடன் கூட்டணி இல்லாமலேயே சொந்த காலில் வெற்றி பெறும் அளவுக்கு பலமாக உள்ளது என்றார்.

    இதனால் சமாஜ்வாடி- காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தரப்பில் கூறும் போது தொண்டர்களின் மரியாதை தான் கட்சியின் மரியாதை, தற்போது சமாஜ்வாடி கட்சி தனக்கு செல்வாக்குள்ள மேற்கு பகுதிக்கு மட்டுமே வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக அகிலேஷ் யாதவின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

    சமாஜ்வாடி வெளியிட்ட முதலாவது பட்டியலில் முலாயம்சிங்கின் தம்பி சிவ்பால் யாதவ் பெயர் இடம் பெற்றது. அவர் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் சிவ்பால் யாதவின் மகன் டதித்யா யாதவ் பெயர் இடம் பெறவில்லை.

    முலாயம்சிங் யாதவின் இளைய மகன் அபர்ணா யாதவ் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இல்லை.

    மூத்த மந்திரி முகமத் அசலும் கான் ராம்பூர் தொகுதி வேட்பாளராகவும், அவரது மகன் அப்துல்லா அசம் ஸ்வார் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    வேட்பாளர் பட்டியலில் சிவ்பால் யாதவ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×