search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டின் செழுமைமிக்க கலாச்சாரம் பாதுகாக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
    X

    தமிழ்நாட்டின் செழுமைமிக்க கலாச்சாரம் பாதுகாக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

    தமிழ்நாட்டின் செழுமைமிக்க கலாச்சாரத்தை எண்ணி பெருமைப்படுவதாக இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை எடுத்துக்காட்டும் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பொங்கலை யொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    வளர்ச்சியில் புதிய உச்சங்களை அடைய தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழர்களின் பண்பாட்டை காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்.

    தமிழர்களின் கலாசாரம், உணர்வுகளை காக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டை காக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.

    தமிழர்களின் உயரிய கலாச்சாரத்தை கண்டு பெருமைப்படுகிறேன். இதில் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    Next Story
    ×