search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒபாமா ஓய்வை தொடர்ந்து டுவிட்டரில் முதலிடம் பிடித்த மோடி
    X

    ஒபாமா ஓய்வை தொடர்ந்து டுவிட்டரில் முதலிடம் பிடித்த மோடி

    ஜனாதிபதி பதவியில் இருந்து ஒபாமா நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அதிகம்பேர் பின்தொடரும் நாட்டு தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, அன்றாட நிகழ்வுகள் மற்றும் தனது சந்திப்புகள் பற்றிய தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் உடனுக்குடன் தெரிவித்து வருகிறார். ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், அதிகமானோர் பின்தொடரும் நாட்டு தலைவர்கள் பட்டியலில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முதலிடம் வகித்து வந்தார். அவரை 8 கோடியே 10 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து ஒபாமா நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அதிகம்பேர் பின்தொடரும் நாட்டு தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். அவரை டுவிட்டரில் 2 கோடியே 65 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இது, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி டொனால்டு டிரம்பை விட (2 கோடியே 5 லட்சம் பேர்) அதிகம் ஆகும்.
    மேலும், பேஸ்புக்கில் 3 கோடியே 92 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 58 லட்சம் பேரும், யுடியூபில் 59 லட்சம் பேரும் மோடியை பின்தொடர்ந்து வருகிறார்கள். டுவிட்டரில், ஆயிரத்து 641 பேரை மோடி பின்தொடர்ந்து வருகிறார். 
    Next Story
    ×