search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐந்து மாநில தேர்தல்: உத்தர பிரதேசத்தில் 56 கோடி ரூபாய் பறிமுதல்
    X

    ஐந்து மாநில தேர்தல்: உத்தர பிரதேசத்தில் 56 கோடி ரூபாய் பறிமுதல்

    சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்தல் ஆணையம் இதுவரை 56.04 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளது.
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு சுமார் 2௦௦ பேரை தேர்தல் செலவீன பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் இருந்து இதுவரை 64 கோடி மதிப்பிலான பணம், மது பாட்டில்கள் , போதைப்பொருள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் 56.04 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது.

    இதில் கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து பணம், மது பாட்டில்கள் என எதனையும் தேர்தல் ஆணையம் இதுவரை கைப்பற்றவில்லை. அதுபோல உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து போதைப்பொருள் மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் இதுவரை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×