search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட பிரத்யங்காரா தேவி சிலையை ஆஸ்திரேலியா ஒப்படைத்தது
    X

    தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட பிரத்யங்காரா தேவி சிலையை ஆஸ்திரேலியா ஒப்படைத்தது

    தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரத்யங்காரா தேவி சிலை உள்ளிட்ட 3 பொருட்களும் மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
    புதுடெல்லி:

    தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால பொருட்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றில் 3 பொருட்கள், ஆஸ்திரேலியாவில், கான்பெரா நகரில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் நோக்கத்தில், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அங்குள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், 3 பொருட்களையும் ஒப்படைக்க ஆஸ்திரேலிய கலைக்கூடம் ஒப்புக்கொண்டது.

    அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரத்யங்காரா தேவி சிலை (கிரானைட் கல்லால் செய்யப்பட்டது), ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட மார்பிள் நடுகல், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து கடத்தப்பட்ட புத்தர் சிலை ஆகிய 3 பொருட்களும் மத்திய கலாசார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அவை டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த பொருட்களை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க கலாசார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆனால், பிரத்யங்காரா தேவி சிலை, தமிழக போலீசின் சிலை தடுப்பு பிரிவின் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதால், அதை சில நாட்களுக்கு பிறகு, தமிழக போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×