search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருண்ஜெட்லியின் பாதுகாப்பு வீரர்கள் வந்த கார் விபத்தில் சிக்கி பெண் காயம்
    X

    அருண்ஜெட்லியின் பாதுகாப்பு வீரர்கள் வந்த கார் விபத்தில் சிக்கி பெண் காயம்

    டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் பாதுகாப்பு வீரர்கள் வந்த கார் அந்த வழியாக வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது
    புதுடெல்லி:

    டெல்லியில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடந்தது. மவுலானா ஆசாத் ரோட்டில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற இந்த கூட்டம் மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நிதி மந்திரி அருண் ஜெட்லி காரில் விக்யான் பவன் வளாகத்தில் இருந்து வெளியே மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது காரை பின்தொடர்ந்து வந்த பாதுகாப்பு வீரர்களின் கார் அந்த வழியாக வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில் 2 கார்களும் சேதம் அடைந்தன. அந்த காரில் இருந்த ஒரு பெண் காயம் அடைந்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
    Next Story
    ×