search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் இருந்து மாயமான 22 பேருக்கு தீவிரவாதிகள் பயிற்சி: தேசிய பாதுகாப்பு படை தகவல்
    X

    கேரளாவில் இருந்து மாயமான 22 பேருக்கு தீவிரவாதிகள் பயிற்சி: தேசிய பாதுகாப்பு படை தகவல்

    கேரள மாநிலத்தில் இருந்து மாயமான 22 பேருக்கு தீவிரவாதிகள் பயிற்சி அளிக்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு படை விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம், காசர்கோடு, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த 22 பேர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீர் என்று மாயமானார்கள். இவர்களில் 6 பேர் பெண்கள் ஆவார்கள்.

    இவர்கள் திடீர் என மாயமானதால் அவர்களது குடும்பத்தினர் அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த நிலையில் மாயமானவர்களில் சிலர் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தாங்கள் பத்திரமாக இருப்பதாகவும், தங்களை தேட வேண்டாம் என்றும் கூறினார்கள்.

    மேலும் சிலர் தங்களது குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பி இருந்தனர். அதில் இடம் பெற்றிருந்த வாசகங்கள் அவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் இணைந்ததை உறுதிப் படுத்துவதாக இருந்தது.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாயமானவர்கள் பற்றி தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்தியது. அவர்கள் விசாரணையிலும் மாயமானவர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டு அந்த இயக்கத்திலேயே இணைந்தது தெரியவந்தது.

    ஆனாலும் அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள்? அவர்கள் பெயர் விவரம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. கடந்த சில மாதங்களாக நடந்த தீவிர விசாரணையில் மாயமான 22 பேரும் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கர்ஹார் என்ற இடத்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாமில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் அவர்கள் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்று வருவதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த முகாமில் இவர்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கி இருந்து பயிற்சி பெற்று வருவதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

    கேரளாவை சேர்ந்த 22 பேரும் மாயமான பிறகு சில வாரங்கள் வரை ரகசியமாக தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு வந்தனர். அவர்கள் பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த தொடங்கிய பிறகு, குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதை முற்றிலுமாக துண்டித்து விட்டனர்.
    Next Story
    ×