search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பிறந்த சித்தூர் மாவட்டத்துக்குட்பட்ட சில கிராமங்களில் சுப்ரீம் கோர்ட்டின் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாரவாரி பள்ளி கிராமத்துக்கு சங்கராந்தி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்தாருடன் வந்திருந்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரியின் பூர்வீக வீட்டின் அருகாமையில் உள்ள புல்லையாகரிப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகள் நடைபெற்றன.


    புல்லையாகரிப்பள்ளி கிராமத்தில் எடுத்தப் படம்

    இதேபோல், அருகாமையில் உள்ள சுற்றுப்பட்டு கிராமங்களிலும் சுமார் 100 காளைகள் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகளில் கலந்து கொண்டன. இந்தப் போட்டிகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதாக தெலுங்கு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.

    இதேபோல், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரை ஒட்டியுள்ள திருப்பத்தூர் அருகாமையில் உள்ள கல்நரசாம்பட்டி பகுதியில் ‘எருது விடும் விழா’ நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் தடையை விதித்திருந்தனர். இந்த தடையை பொருட்படுத்தாமல் நேற்று நடத்தப்பட்ட எருது விடும் விழாவில் 50-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன.

    இந்த செய்திகளை சமூக வலைத்தளங்களின் வழியாக அறிந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், இதேபோல் தமிழ்நாட்டிலும் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு கட்டாயமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
     
    சுப்ரீம் கோர்ட்டால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள சேவல் சண்டை போட்டிகளும் இம்மாநிலத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருவதும், இந்த பந்தயத்தில் பலநூறு கோடி ரூபாய் அளவில் சூதாட்டம் நடப்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×