search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எமர்ஜென்சி காலத்தை விட மோடி ஆட்சி மோசமாக உள்ளது: மம்தா குற்றச்சாட்டு
    X

    எமர்ஜென்சி காலத்தை விட மோடி ஆட்சி மோசமாக உள்ளது: மம்தா குற்றச்சாட்டு

    1975-ல் இருந்த எமர்ஜென்சி காலத்தை விட மோடி ஆட்சி மோசமாக உள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்
    கொல்கத்தா:

    ரோஸ்வேலி சிட்பண்டு மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக தாக்கி வருகிறார்.

    நேற்று இந்த கட்சி எம்.பி.க்கள். 30 பேர் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    ரூபாய் நோட்டு பிரச்சினையில் மோடிக்கு எதிராக நாங்கள் போராடுவதால் எங்கள் கட்சியினரை பழிவாங்குவதற்காக பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு இருக்கிறார். தற்போது சி.பி.ஐ. என்பது இந்திய சதி அமைப்பாக மாறி விட்டது.

    நான் 23 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்திருக்கிறேன். எத்தனையோ அரசுகளை பார்த்து இருக்கிறேன். ஆனால், மோடி அரசு போன்று மோசமாக பழிவாங்கும் அரசை பார்த்தது இல்லை. 1975-ல் இருந்த எமர்ஜென்சி காலத்தை விட மோடி ஆட்சி மோசமாக உள்ளது.

    ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இதில், ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு மக்களை பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    மத்திய அரசு ரூபாய் நோட்டு பிரச்சினையில் தினமும் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. முதலில் இதை நிறுத்த வேண்டும்.
    மோடி அரசின் செயல்பாட்டை கண்டித்து நாடு முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டத்தை நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×