search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரண் ரிஜிஜூ ஊழல், பண ஒழிப்பு விவகாரத்தால் அமளி: நாளைவரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு
    X

    கிரண் ரிஜிஜூ ஊழல், பண ஒழிப்பு விவகாரத்தால் அமளி: நாளைவரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

    ரூ. 450 கோடி ரூபாய் ஊழலில் தொடர்புள்ள மத்திய இணை மந்திரி கிரன் ரிஜிஜு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாளைவரை பிற்பகல் வரை பாராளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பாயும் பிச்சோம் மற்றும் டெங்கா ஆற்றின் நீரை மையமாக வைத்து கடந்த 2005-ம் ஆண்டு காமெங் புனல் மின்சார நிலையம் திறக்கப்பட்டது.

    இந்த புனல் மின்சார நிலையத்தை அமைக்கும் பணியில் சுமார் 450 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகவும், இந்த ஊழலில் மத்திய உள்துறை இணைமந்திரி கிரண் ரிஜிஜு மற்றும் அவரது உறவினர் கோபோய் ரிஜிஜு ஆகியோருக்கு தொடர்புள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான சந்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த மின்சார நிலையத்தை கட்டித்தந்த ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக பணத்தை விடுவிக்கும்படி கிரன் ரிஜிஜு எழுதியிருந்த ஒரு கடிதத்தை ஆதாரமாக வைத்து சமீபத்தில் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதவிர தன்னிடம் மேலும் பல ஆதாரங்கள் உள்ளதாக சந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார்.
     
    இதுதொடர்பான விசாரணை முடியும்வரை மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்த தொடங்கியுள்ளது. வெளிப்படையான ஆட்சி நிர்வாகம் என்று கூறிவரும் பிரதமரின் தற்போது கேள்விக்குறியாகி விட்டது. இந்த ஊழக் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை என்ன? என்று மக்கள் கவனிக்க தொடங்கி விட்டார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கிரண் ரிஜிஜு, இதெல்லாம் கட்டுக்கதை. குற்றச்சாட்டாகவே எடுத்துக்கொள்ள கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றம் கூடியதும் கிரண் ரிஜிஜு மீதான ஊழல் குற்றச்சாட்டை மையமாக வைத்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும், இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதனால், சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

    பண ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாகவும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டதால் மக்களவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

    12 மணிக்கு பின்னர் அவை கூடியபோதும் இதேநிலை நீடித்ததால் நாளைவரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
    Next Story
    ×