search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமளிக்கு மத்தியிலும் அரசியல் நாகரிகம்: சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மத்திய மந்திரிகள்
    X

    அமளிக்கு மத்தியிலும் அரசியல் நாகரிகம்: சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மத்திய மந்திரிகள்

    பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட கடும் அமளிக்கு மத்தியிலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரச்சினை எழுப்பி அமளியில் ஈடுபடுவதால், பாராளுமன்றகு குளிர்கால கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கியுள்ளது. இன்றும் முக்கிய பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

    இந்த அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியிலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் கட்சி எல்லைகளைக் கடந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று வீடு திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மக்களவைக்கு வந்தார். ரூபாய் நோட்டு பிரச்சினையால் ஏற்பட்ட அமளி காரணமாக காலை 11.10 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது சில பா.ஜ.க. எம்.பி.க்கள் சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதன்பின்னர் இரண்டாவது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டபோது, மத்திய மந்திரி ஆனந்த் குமார், இணை மந்திரிகள் அலுவாலியா, ஜிதேந்திர சிங் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்று சோனியாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பொது பிரச்சினையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக பாராளுமன்றத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ள நிலையிலும், கட்சி எல்லைககளை கடந்து சோனியா காந்திக்கு பிற கட்சிகளின் எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தது அவர்களின் முதிர்ச்சியான அரசியல் நாகரிகத்தையே காட்டுகிறது.
    Next Story
    ×