search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னணு முறையில் பணம் செலுத்தினால் தள்ளுபடி: முழு விவரம்
    X

    மின்னணு முறையில் பணம் செலுத்தினால் தள்ளுபடி: முழு விவரம்

    மின்னணு முறையில் பணம் செலுத்தினால் தள்ளுபடி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். எதற்கெல்லாம் தள்ளுபடி என்ற முழுவிவரம் இங்கே....
    புதுடெல்லி:

    கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு மத்திய அரசு எதிர்பார்த்த போதுமான பயன்கிடைக்கவில்லை. அதேவேளையில் டெபாசிட் செய்த பணத்திற்கு திருப்பி கொடுப்பதற்கான அளவில் பணம் அச்சிடப்படவில்லை.

    இதனால் மின்னணு பண பரிமாற்றத்திற்கு மக்கள் மாற வேண்டும் என்று மத்திய அரசு கூறிவருகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இந்த திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்துவதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று பல்வேறு தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    அந்த தள்ளுபடி அறிவிப்புகள் பின்வருமாறு:-

    *பெட்ரோல் டீசலுக்கு மின்னணு (DIGITAL) முறையில் பணம் செலுத்தினால் 0.75 சதவீதம் தள்ளுபடி.

    * 10 ஆயிரத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட 1 லட்சம் கிராமங்களுக்கு 2 ஸ்வைப் மிஷின்கள் வழங்கப்படும்.

    * மைக்ரோ ஏடிஎம், ஏடிஎம்களில் பயன்படுத்தும் வகையில், கிஷான் கிரிடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படும்.

    * புறநகர் ரெயில்களில் மின்னணு முறையில் மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்குபவர்களுகு்கு 0.5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

    * ரெயில் பயணச் சீட்டு மின்னணு கார்டு மூலம் வாங்கினால் ரூ.10 லட்சம் இலவச காப்பீடு

    * ரெயில்வே நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்தால் 5 சதவீதம் சலுகை

    * சுங்கச்சாவடியில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 10 சதவீதம் தள்ளுபடி

    * எல்ஐசி காப்பீடுக்கு மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 8 சதவீதம் தள்ளுபடி.

    மேலும், ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை இலக்காக வைத்து அறிவிக்கப்பட்டது என தெரிவித்தார். 
    Next Story
    ×