search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி, வடமாநிலங்களில் பனிமூட்டம்: 100 ரெயில்கள் தாமதம்
    X

    டெல்லி, வடமாநிலங்களில் பனிமூட்டம்: 100 ரெயில்கள் தாமதம்

    டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் இருந்து வருகிறது. இதனால் இன்று ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனி மூட்டம் இருந்து வருகிறது. இதனால் ரெயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    டெல்லி மற்றும் வட மாநிலங்களில் இன்றும் கடுமையான பனி பொழிவு நிலவியது.

    காலை 8 மணி வரை 11 டிகிரி செல்சியஸ் வெப்பமே இருந்தது. இதனால் பொது மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள். ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. கடும் பனியால் சாலை போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

    டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100 மீட்டர் தூரத்துக்கும் பார்வை எதுவும் தெரியவில்லை.

    இதனால் விமான சேவையில் பாதிப்பு நிலவியது. 6 சர்வதேச விமானங்களும், 7 உள்ளூர் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஒரு உள்ளூர் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



    இதே போல ரெயில் போக்குவரத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. கடும் பனி மூட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தாமதமாக வருகின்றன என்று வடக்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெல்லியில் 94 ரெயில்கள் தாமதமாக வருகின்றன. 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 16 ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதே போல லக்னோ, அமிர்தசரசிலும் பனி மூட்டத்தால் பாதிப்பு நிலவியது. இந்த இரு நகரங்களிலும் காலை 8 மணி வரை 12 டிகிரி செல்சியஸ் வெப்பமே இருந்தது.

    இந்த பனி மூட்டம் மேலும் 2 முதல் 3 தினங்களுக்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×