search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி
    X

    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி

    வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தில் (ரெப்போ) மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
    மும்பை:

    மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகியகால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதமாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதுபற்றி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.எஸ்.காந்தி கூறியதாவது:-

    ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ரிவர்ஸ் ரெப்போ 5.75 சதவீதமாக இருக்கும். உள்நாட்டு மொத்த உற்பத்தி 7.6 சதவீதத்துக்குப் பதிலாக 7.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரொக்க கையிருப்பு விகிதமும் (சிஆர்ஆர்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 4 சதவீதமாக நீடிக்கிறது.

    ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு ரூ.11.55 லட்சம் கோடி அளவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பெறப்பட்டுள்ளது.

    மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டே, ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படுகின்றன. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டுவரும் நிலையில், பழைய நோட்டுக்களை டிசம்பர் 30-ம் தேதிக்குள் மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×