search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூதரகம் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பதா
    X

    தூதரகம் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிப்பதா

    வாரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே வங்கியில் இருந்து எடுத்துக்கொள்ள முடியும் என ரஷிய தூதரகத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி கடிதம் எழுதியது.
    புதுடெல்லி:

    உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால், நாட்டில் பண தட்டுப்பாடு நிலவுகிறது. வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து டெல்லியில் உள்ள ரஷிய தூதரகமும் தப்பவில்லை.

    வாரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் மட்டுமே வங்கியில் இருந்து எடுத்துக்கொள்ள முடியும் என ரஷிய தூதரகத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி கடிதம் எழுதியது.

    ஆனால் இந்த தொகை ரஷிய தூதரக அன்றாட நிர்வாகத்துக்கு போதாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கு இந்தியாவிடம் ரஷியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு, கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்ளவேண்டும் என தூதர் அலெக்சாண்டர் கடாக்கின் கடிதம் எழுதி உள்ளார்.

    இது தொடர்பாக ரஷிய தூதரகம் பதில் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    அப்படி பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்காவிட்டால், பழிவாங்கும் நடவடிக்கையாக ரஷியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ரஷிய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    Next Story
    ×