search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. நிச்சயம் உடையும்: சுப்ரமணியன் சுவாமி பேட்டி
    X

    அ.தி.மு.க. நிச்சயம் உடையும்: சுப்ரமணியன் சுவாமி பேட்டி

    அ.தி.மு.க கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலைக் குறைபாடு காரணமாக திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார். இதனால் அதிமுக-வில் பெரும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அ.தி.மு.க கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-

    அ.இ.அ.தி.மு.க. ஒரே கட்சியாக இருக்காது. சசிகலா நடராஜன் அந்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார். பன்னீர் செல்வத்தை சுதந்திரமாக இருக்க விடமாட்டார்.
     தன்னுடைய குடும்பத்தில் இருந்து பன்னீர் செல்வம் இடத்திற்கு ஒருவரை கொண்டு வருவார்.


    பன்னீர் செல்வத்திற்கு கட்சிக்குள் எந்தவித அடித்தளமும் இல்லை. அதேபோல் சசிகலாவிற்கும் எந்தவொரு அரசியல் புத்திசாலித்தனமும் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா இறந்த 2 மணி நேரத்திற்குள், ஓ.பன்னீர் செல்வம் புதிய முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
    Next Story
    ×