search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர்
    X

    இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர்

    இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் நியமிக்கப்பட உள்ளார். அவரது பெயரை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூன் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த தலைமை நீதிபதியை நியமிப்பது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு இன்று பரிந்துரை செய்துள்ளார். அவர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தில், நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹரை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி கூறியுள்ளார்.

    எனவே, அவரது பரிந்துரையின்படி நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார். இதன்மூலம் 44-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் ஜெகதீஷ் சிங் கேஹர். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜனவரி 4-ம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். ஜனவரி 4-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அவர் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

    தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் சீக்கிய நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×