search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தூர் அரசு வங்கிகளுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.200 கோடி விமானத்தில் வந்தது
    X

    சித்தூர் அரசு வங்கிகளுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.200 கோடி விமானத்தில் வந்தது

    சித்தூரில் உள்ள அரசு வங்கிகளுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.200 கோடி தனி விமானத்தில் ரேணிகுண்டாவில் வந்து இறங்கியது. அங்கிருந்து சித்தூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது.
    திருமலை:

    சித்தூரில் உள்ள அரசு வங்கிகளுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.200 கோடி தனி விமானத்தில் ரேணிகுண்டாவில் வந்து இறங்கியது. ரேணிகுண்டாவில் இருந்து வாகனங்களில் சித்தூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடமிருந்த இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்கள், ஏ.டி.எம். மையங்களில் கொடுத்து மாற்றி வந்தனர். இந்த அறிவிப்பால் வங்கிகள், தபால் நிலையங்களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் ரிசர்வ் வங்கியில் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரு தனி விமானத்தில் ரூ.365 கோடி நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மும்பையில் இருந்து அனுப்பப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரேணிகுண்டா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. ரேணிகுண்டாவில் இருந்து வாகனங்களில் சித்தூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    சித்தூரில் உள்ள அரசு வங்கிகளுக்கு மட்டும் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது. சித்தூரில் உள்ள ஆந்திரா வங்கிக்கு ரூ.60 கோடி, சித்தூர் இந்தியன் வங்கிக்கு ரூ.100 கோடி, சித்தூர் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.40 கோடி பிரித்துப் பலத்தக்காவலுடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் சித்தூர் தபால் நிலையத்துக்கு ரூ.14 கோடியும், வெளி மாவட்ட வங்கிகளுக்கு மீதமுள்ள தொகை அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் புதிய 2 ரூபாய் நோட்டுகள் மூலமாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பளமும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×