search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிச்சைக்காரர்கள் ஸ்வைப் மெஷினுக்கு மாறிவிட்டார்கள்: மோடி சொல்கிறார்
    X

    பிச்சைக்காரர்கள் ஸ்வைப் மெஷினுக்கு மாறிவிட்டார்கள்: மோடி சொல்கிறார்

    ‘வாட்ஸ் அப்’பில் பிச்சைக்காரர்களே ‘ஸ்வைப் மெஷின்’ வைத்துக்கொள்கிற நிலை உருவாகி இருப்பதாக மோடி சுட்டிக்காட்டி பேசினார்.

    மொரதாபாத்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் மொரதாபாத்தில் நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டு மக்கள் அனைவரும் ரொக்க பணமில்லா கொடுக்கல், வாங்கல் முறைக்கு மாற வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

    தனது கருத்துக்கு வலு சேர்க்க அவர் ‘வாட்ஸ் அப்’பில் பிச்சைக்காரர்களே ‘ஸ்வைப் மெஷின்’ வைத்துக்கொள்கிற நிலை உருவாகி இருப்பதை சுட்டிக்காட்டும் விதத்தில் ஒரு வீடியோ ஓடிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

    இது குறித்து அவர் குறிப்பிடும்போது, “இது எத்தனை தூரத்துக்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பிச்சைக்காரனிடம் ஒருவர், ‘உனக்கு உதவத்தாம்பா எனக்கும் விருப்பம். ஆனால் என்கிட்ட சில்லரை இல்லியே?’ என்கிறார். அதற்கு அந்த பிச்சைக்காரர், ‘ஐயா, கவலையே படாதீங்க’ என்று சொல்லி, ‘ஸ்வைப் மெஷின்’ ஒன்றை அவரிடம் நீட்டி, ‘டெபிட் கார்டை கொடுங்க’ என்று கேட்கிறார்” என கூறினார்.

    மோடி சொன்னதைக் கேட்டு, கூட்டத்தில் பங்கேற்றிருந்த மக்கள் அனைவரும் சிரித்தார்கள். 
    Next Story
    ×