search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிலையன்ஸ் ஜியோ டேட்டா அளவு குறைப்பு அனைவருக்கும் நன்மை பயக்கும்
    X

    ரிலையன்ஸ் ஜியோ டேட்டா அளவு குறைப்பு அனைவருக்கும் நன்மை பயக்கும்

    ஜனவரி 1-ம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா அளவு நாள் ஒன்றிற்கு 1 GB என குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பயனர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாகவே இருக்கும்.
    கொல்கத்தா:

    ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா அளவு நாள் ஒன்றிற்கு 4 GB என்ற அளவு டிசம்பர் 31 வரை வழங்குகிறது. இதனிடையே ஜியோ இலவச சேவைகள் மார்ச் வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நாள் ஒன்றிற்கு 1 GB அளவு டேட்டா மட்டுமே பயனர்கள் அதிவேகத்தில் பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி சமீபத்தில் அறிவித்தார். வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டா அளவு குறைக்கப்பட்டிருப்பது பயனர்களுக்கு நன்மை பயக்கும் என தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  

    நாடு முழுக்க ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவே ஜியோ இலவச சேவைகள் நீட்டிக்கப்படுகிறது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் இறுதிக்குள் ஜியோ சேவையில் 10 கோடி பயனர்களை ஈர்க்க முடியும் என நம்பப்படுகிறது. ஜியோ சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் போது பயனர் எண்ணிக்கை குறையலாம் என்றும் கூறப்படுகிறது.

    தற்சமயம் வரை ரிலைன்ஸ் ஜியோ சேவையினை சுமார் 5.2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றிற்கு 1 GB என்ற அளவு, ஒட்டு மொத்தமாக ஜியோ இண்டர்நெட் பயன்பாடுகளை குறைக்கும் என்பதால் இண்டர்நெட் தரம் அதிகரிக்கும். இதன் காரணமாக ஜியோ பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, ஜியோ நெட்வொர்க் சரியில்லை என்ற குற்றச்சாட்டுகளை குறைக்கும்.

    ஜியோவின் புதிய 4ஜி சிம் கார்டுகள் டோர் டெலிவரி முறையில் விநியோகம் செய்யப்பட இருப்பதை வைத்து பார்க்கும் போது பயனர் ஒருவர் மூலம் ஈட்டும் வருமானத்தை ரிலையன்ஸ் ஜியோ அதிகளவு நிர்ணயம் செய்ய இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் சராசரியாக பயனர் ஒருவர் மூலம் ரூ.126 வரை ஈட்டப்படுகிறது. இதுவே ஜியோ 4ஜி சேவைகள் முழுமையாக இயங்கும் போது பயனர் ஒருவருக்கு ரூ.300 வரை வருமானம் ஈட்ட முடியும்.
    Next Story
    ×