search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பிரபல கவிஞர் பேக்கல் உட்சாஹி மரணம்
    X

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி., பிரபல கவிஞர் பேக்கல் உட்சாஹி மரணம்

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் நெருக்கமான அரசியல் தொடர்பு வைத்திருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் பிரபல கவிஞருமான பேக்கல் உட்சாஹி மரணம் அடைந்தார்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல கவிஞரான பேக்கல் உட்சாஹி, ஒருமுறை காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்துக்காக இங்குவந்த பண்டிதர் ஜவஹர்லால் நேருவை வானளாவ புகழ்ந்து கவிதை பாடியதன் மூலம் அவரது நன்மதிப்பை பெற்றார். பல்வேறு ‘கஸல்’ இசைப் பாடல்களையும் இயற்றிய இவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் நெருக்கமான அரசியல் தொடர்பு வைத்திருந்தார்.

    பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக பொறுப்பேற்ற இவர் பிரதமர் தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டு குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு விருதுகளை பெற்ற இவருக்கு கடந்த 1976-ம் ஆண்டு இலக்கியத்துக்கான ‘பத்மஸ்ரீ’ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.

    சமீபகாலமாக, மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் கடந்த 1-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பேக்கல் உட்சாஹி(88), சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் உயிரிழந்தார்.

    அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×