search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க பா.ஜ.க. தலைமை உத்தரவு
    X

    பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க பா.ஜ.க. தலைமை உத்தரவு

    எதிர்க்கட்சிகளை சமாளிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டுள்ளது
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற முடியாமல் முடங்கி உள்ளது. இதையடுத்து பா.ஜனதா கட்சி தலைமை தங்களுடைய எம்.பி.க்களுக்கு முக்கிய உத்தரவை நேற்று பிறப்பித்தது. அதில், எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தில் பல முக்கிய மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றன. எனவே இரு அவைகளையும் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் வரும் வாரம் முழுவதும் பாராளுமன்றத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘ரூபாய் நோட்டு முடக்கத்துக்கு பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மம்தா பானர்ஜி எதிர் அரசியல் செய்து வருகிறார். எனவே எதிர்கட்சிகளை சமாளிக்க அனைத்து எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த வாரம் பாராளுமன்றம் சுமுகமாக நடைபெறும் என நம்புகிறோம்’ என்றார். 
    Next Story
    ×