search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனவரியில் வெளியாகும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்
    X

    ஜனவரியில் வெளியாகும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்கள் இந்தியாவில் ஜனவரி மாதம் வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
    செப்டம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சாம்சங் கியர் S3 ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஃபிரான்டியர் மற்றும் கிளாசிக் என இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்வாட்ச்கள் இந்தியாவில் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

    இந்திய வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஜனவரி மாதம் வெளியாகும் என்ற தகவல் மட்டும் கசிந்திருக்கிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்வாட்ச்களும் இந்தியாவில் வெளியாகும் என்பதோடு இவற்றின் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை. இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களின் வடிவமைப்பு ஆண் வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமாக பொருந்தும் படி இருக்கிறது.

    புதிய சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்களில் வழங்கப்பட்டிருக்கும் புதிய வகை ரேடியோ சிப், ஸ்மார்ட்வாட்ச் ஆனது அதிவேக 4ஜி மொபைல் நெட்வொர்க்களுடன் இணைந்து கொள்ளும் திறன் பெற்றிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்வாட்ச்களை ஸ்மார்ட்போன்களுடன் இணைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த அம்சம் தற்சமயம் வரை ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களிலும் வழங்கப்படவில்லை.

    சாம்சங் கியர் S3 ஸ்மார்ட்வாட்ச்களில் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, தூசு மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட், GPS, மற்றும் பில்ட் இன் ஸ்பீக்கர் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.  
    Next Story
    ×