search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிமுக தினத்தில் அதிகளவு தள்ளுபடியுடன் கிடைக்கும் லெனோவோ ஸ்மார்ட்போன்
    X

    அறிமுக தினத்தில் அதிகளவு தள்ளுபடியுடன் கிடைக்கும் லெனோவோ ஸ்மார்ட்போன்

    லெனோவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் விற்பனை தினத்தில் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.
    லெனோவோ நிறுவனம் இந்தியாவில் K6 பவர் எனும் ஸ்மார்ட்போனை சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ரூ.9,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லெனோவோ K6 பவர் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    லெனோவோ K6 பவர் ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் முதல் நாளில் பிளிப்கார்ட் தளத்தில் எக்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.8000 வரை தள்ளுபடி பெற்று ரூ.1,999 என்ற விலையில் லெனோவோ K6 பவர் ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இதோடு ஸ்மார்ட்போனினை வாங்க முன்பதிவு செய்ய முடியும், இவ்வாறு முன்பதிவு செய்யும் 100 வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.10,000 மதிப்புடைய பிளிப்கார்ட் பரிசு கூப்பன்கள் வழங்கப்படும்.

    கூடுதலாக மோட்டோ பல்ஸ் 2 ஹெட்போன்களை ரூ.499 என்ற சிறப்பு விலையில் வாங்கிட முடியும். இந்த ஹெட்போனின் உண்மையான விலை ரூ.1,499 ஆகும். கட்டண முறையில் வாங்கும் போது ரூ.485 என்ற மாத தவணை செலுத்தும் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அனைத்து சலுகைகளும் முதல் கட்ட விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் விற்று தீரும் வரை வழங்கப்படுகிறது.

    லெனோவோ K6 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 SoC, 3 GB ரேம், 32 GB வரை நீட்டிக்கும் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX258 சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா IMX219 சென்சார், வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. 
    Next Story
    ×