search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கிகளில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஆதார் கட்டாயம்: ரிசர்வ் வங்கி
    X

    வங்கிகளில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஆதார் கட்டாயம்: ரிசர்வ் வங்கி

    வாடிக்கையாளர்களின் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு கேஒய்சி எண்ணிற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    புது டெல்லி:

    ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பிற்கு பின் மக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தவண்ணம் உள்ளனர். அதேசமயம், பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாலும், வங்கிகளில் கூட்டம் அலைமோதுவதாலும் மின்னணு பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

    ரூபாய் நோட்டுகள் மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் ரிசர்வ் வங்கி, மின்னணு பரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண் அவசியம் என புதிய உத்தரவு ஒன்றை இன்று பிறப்பித்துள்ளது.

    ஆதார் எண் தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் "மின்னணு பண பரிவர்த்தனையில் கேஒய்சி எண்ணிற்கு மாற்றாக ஆதார் எண்ணையே பயன்படுத்த வேண்டும். வங்கிகள்-வாடிக்கையாளர்கள் மின்னணு பரிவர்த்தனைக்கு மட்டும் இது பொருந்தும்.

    ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொருத்த வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் 30-க்குள் ஆதார் எண்ணை முழுமையாக பயன்படுத்த வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×