search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறிய 27 வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட்: நிதித்துறை அமைச்சகம்
    X

    ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறிய 27 வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட்: நிதித்துறை அமைச்சகம்

    பணப் பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறியதாக 27 வங்கி அதிகாரிகளை நிதித்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது.
    புது டெல்லி:

    ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பிற்குப் பின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பலர் பினாமி பெயர்களில் பணத்தை டெபாசிட் செய்வதாகவும், இந்த முறையற்ற பரிவர்த்தனைக்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில் பணப் பரிவர்த்தனையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதாக 27 வங்கி அதிகாரிகளை இடை நீக்கம் செய்திருப்பதாக நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 6 வங்கி அதிகாரிகள் முக்கியத்துவம் இல்லாத இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையில் இதுவரை ரூ.152 கோடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரில் நேற்று நடைபெற்ற சோதனையில் ரூ.5.7 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×