search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் மார்ச் வரை நீட்டிப்பு: டிராய் விசாரணை
    X

    ரிலையன்ஸ் ஜியோ இலவசங்கள் மார்ச் வரை நீட்டிப்பு: டிராய் விசாரணை

    ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் பயன்படுத்தும் காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டது குறித்து டிராய் விசாரணை செய்ய இருக்கிறது.
    இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் டிசம்பர் 31-ம் தேதிவரை இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். ஜியோ சேவைகள் இலவசமாக வழங்கப்படுவது குறித்து மற்ற டெலிகாம் நிறுவனங்கள் அளித்த புகார்களில் ஜியோ இலவசங்கள் டிசம்பர் 31 என்ற காலக்கெடுவுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.  

    இந்நிலையில் புத்தாண்டு சலுகை என்ற பெயரில் அனைத்து ஜியோ சேவைகளும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முகேஷ் அம்பானி நேற்று அறிவித்தார். ஜியோ இலவசங்கள் நீட்டிக்கப்படுவது குறித்த முழுமையான திட்டங்களை விளக்கி மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ரிலையன்ஸ் ஜியோ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ சமர்ப்பித்த திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்து சரியான நேரத்தில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 5.2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைகளை செப்டம்பர் 4-ம் தேதி அறிவித்தது.

    டிசம்பர் 4-ம் தேதி முதல் ஜியோ சிம் வாங்குவோர் 'ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு சலுகை'யின் கீழ் இலவச டேட்டா, வாய்ஸ் மற்றும் வீடியோ சேவைகளை அடுத்த ஆண்டு மார்ச்-31 வரை பெற முடியும். இத்துடன் ஏற்கனவே ஜியோ சிம் வாங்கியோருக்கும் இந்த சேவை தானாக நீட்டிக்கப்பட இருக்கிறது.

    இந்த திட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றிற்கு 1 GB அளவு டேட்டாதான் பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×