search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமானது
    X

    புதிய ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகமானது

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 3 கருவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T கருவிகளை ஒப்பிடும் போது புதிய ஒன்பிளஸ் 3T கருவியில் வேகமான SoC, அதிக ரெசல்யூஷன் கொண்ட கேமரா, பெரிய பேட்டரி, நீட்டிக்கப்பட்ட இன்டர்னல் மெமரி அளவு உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த கருவியில் வழங்கப்பட்டிருக்கும் இதர முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 3T அலுமினியம் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது. கருவியில் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் கைரேகை ஸ்கேனர், ஹோம் பட்டனில் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 3T ஆக்ஸிஜன் ஓஎஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது. 5.5 இன்ச் திரை 1080x1920 பிக்ஸல் ரெசல்யூஷன் ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

    இத்துடன் புதிய ஒன்பிளஸ் 3T குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 SoC மற்றும் 6ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. கேமராவை பொருத்த வரை 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX298 சென்சார், f2/0 அப்ரேச்சர், OIS, EIS மற்றும் PDAF ஆட்டோஃபோகஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அழகிய செல்ஃபி எடுக்க ஏதுவாக 16 எம்பி செல்ஃபி கேமரா, சாம்சங் 3P8SP சென்சார், f2/0 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது.

    மெமரியை பொருத்த வரை ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு வகை இன்டர்னல் மெமரி அளவுகளை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி LTE பேன்ட், வை-பை ac, ப்ளூடூத் 4.2, NFC, யுஎஸ்பி Type-C, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், GPS/A-GPS வழங்கப்பட்டுள்ளன. இத்தனை அம்சங்கள் கொண்ட ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் 3400 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. வேகமகாக சார்ஜிங் செய்ய ஏதுவாக ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன் 64ஜிபி மாடல் ரூ.29,999/- என்றும் 128ஜிபி மாடல் ரூ.34,999/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக விலை கொண்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 3T அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 14, முதல் அமேசான் இந்தியா தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×