search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரில் சிக்கிய ரூ.5.7 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள்: வருமான வரி சோதனை தீவிரம்
    X

    பெங்களூரில் சிக்கிய ரூ.5.7 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள்: வருமான வரி சோதனை தீவிரம்

    பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    பெங்களூர்:

    கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. மேலும், புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தன. எனவே, செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றி வருகின்றனர்.

    அதேசமயம், ஹவாலா பணப் பரிமாற்றம் செய்வோரிடம் கருப்புப் பணம் புழங்குவதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஹவாலா டீலர்கள் மற்றும் தனி நபர்களிடம் கருப்பு பண புழக்கத்தை தடுக்கும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று நாடு முழுவதும் சோதனை நடத்துகின்றனர்.

    இதேபோல் கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றுவோரை கண்டறியும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் பெங்களூரில் நடத்தப்பட்ட சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் சிக்கியது.

    பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 5.7 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் ஆகும். இதுவே, வருமான வரி சோதனையில் சிக்கிய புதிய நோட்டுக்களின் அதிகபட்ச தொகையாகும். இதுதவிர 90 லட்சம் பழைய ரூபாய் நோட்டுக்கள், ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் மற்றும் நகைகள் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×