search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேச்சுவார்த்தைக்கு தயார் - ஆனால் காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டும்: பாகிஸ்தான்
    X

    பேச்சுவார்த்தைக்கு தயார் - ஆனால் காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டும்: பாகிஸ்தான்

    பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் காஷ்மீர் பிரச்சனை குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கோட்டு பகுதியில் உரி, சர்ஜிக்கல் தாக்குதல்களை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. அத்துமீறல்களில் ஈடுபடுவதாக இருநாட்டு ராணுவ வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதனிடையே கடந்த சில தினங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் மூன்று பேரும், அதேபோல் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உட்பட 7 பேரும் கொல்லப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பாகிஸ்தான் நேற்று முன்தினம் வலியுறுத்தி இருந்தது,

    இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் காஷ்மீர் பிரச்சனை குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் இன்று தெரிவித்துள்ளது.

    இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் அஜிஸ் பேசுகையில், “எங்களது எல்லையை பாதுகாக்க முழு திறனும் உள்ளது. எக்காரணத்தை கொண்டும் இந்தியாவின் ஆதிக்கத்தை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்” என்று கூறினார்.

    இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் ஆசியாவின் அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அஜிஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×